மக்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்!

அழியாச்சுடர்கள்

தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் சாவடைந்தார். என்கிற செய்தி கடந்த 20ம் திகதி மாலை புலிகளின் குரல் வானொலியில் அறிவிக்கப்பட்டதும் அதனை நம்புவது கடினமானதாக இருந்தது. அச்செய்தி மக்கள் மனங்களை இடிபோல் தாக்கியது. மக்கள் மீது பற்றும் பாசமும் வைத்திருந்த, மக்களாலும் பேரன்புடன் நேசிக்கப்பட்ட ஒரு தளபதியாக திகழ்ந்தவர் பிரிகேடியர் பால்ராஜ்.

27.11.1965 ஆம் ஆண்டு பிறந்த பால்ராஜ். முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத் தொடுவாயைச் சேர்ந்தவர்.

1984 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளபட்ட பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். பல வெற்றித்தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர்.தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படையாக வந்த இந்தியப்படைக்கு சிம்மசொப்பனமாக செயற்பட்டவர். மாங்குளம் படைமுகாம் தாக்கியழிப்பு, ஆனையிறவுத்தளம் மீதான ஆகாய கடல் வெளி நடவடிக்கை, ஓயாத அலைகள்- 01, 02, 03 போன்ற பெரும் தாக்குதல் நடவடிக்கைகளில் பங்காற்றியவர். தாயக நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்க சிங்களப்படையினரால் பாரிய அளவில் மேற்கொள்ளபட்ட யாழ்தேவி, ரிவிரச போன்ற படைநடவடிக்கைகளுக்கு எதிரான புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளில் முன்னின்று பங்கேற்றவர்.

விடுதலைப்புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சாள்ஸ் அன்ரனி படையணியின் முதலாவது தளபதி என்கிற பெருமையும் இவரையே சேரும். எல்லாவற்றிற்கும் மேலாக எந்த மக்களின் விடுதலைக்காக அவர் போராடினாரோ அந்த மக்களை அதிகம் நேசித்தார். களத்தில் போராளிகளை அன்போடு வழிநடத்தினார். ஆகாய கடல் வெளித் தாக்குதல்களின் போது களமுனைகளில் எடுக்கப்பட்ட காணொளி நாடாவைப்பார்த்த போதே…

View original post 232 more words

Advertisements

கரும்புலி மேஜர் அரசப்பன் வீரவணக்க நாள்

Eelamaravar

கரும்புலி மேஜர் அரசப்பன் வீரவணக்க நாள் இன்றாகும்.

BT Maj Arasappan

மட்டக்களப்பு மாவட்டத்தில் 29.05.1999 அன்று தேசத்துரோகி ‘ராசிக்’ மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் அரசப்பன் ஆகிய கரும்புலி மாவீரரின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

View original post

ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்

அழியாச்சுடர்கள்

சிவராமின் ஐந்தாவது நினைவுதினம் இன்று

படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் ஐந்தாவது ஆண்டு நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும், பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார்.

இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்…” என்று வீரகேசரி வார வெளியீட்டில் சிவராம் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை கணினி யுகத்திற்குள் கொண்டுவந்த பெருமையும் சிவராமையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாமனிதர் சிவராமின் இறுதிக் கட்டுரை


சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவராம் அவர்கள் 24.04.2005 அன்று வெளியான வீரகேசரி வாரஇதழில் ‘எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும் தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் முழுவடிவம். இக் கட்டுரையே அவர் எழுதிய இறுதிக் கட்டுரையாகும்.

எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும்
தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்

– தராக்கி டி.சிவராம் –

நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். போகிறார். அவர் வரும்போதும் போகும்போதும் தமிழ் ஊடக ஆரவாரம் ஒன்று கிளம்பும். அது மக்களிடையே…

View original post 3,442 more words

நினைவழியாத் தடங்கள் – 09:தீச்சுவாலை வெற்றி.

அழியாச்சுடர்கள்

தலைவரின் உபாயம்

2001 ம் ஆண்டு முகமாலைப்பகுதியில் சிங்களத்தின் பாரிய படைநகர்வை எதிர்கொள்ள படையணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் இந்தச் சமரை வென்றேயாகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. ஏனெனில் ஓயாத அலைகளில் கிடைத்த தொடர் வெற்றிகள், யாழ்ப்பாணத்திலிருந்து பின்வாங்கியதில் ஆட்டம் கண்டது. அதனைத் தொடர்ந்து தென்மராட்சியில் இராணுவத்தினர் மேற்கொண்ட ‘கிணிகிர’ இராணுவ நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தமுடியாமல் கணிசமான இழப்புடன் பின்வாங்கலைச் செய்து முகமாலையில் நிலையமைத்தது ஒரு பின்னடைவாகவே இருந்தது.

மறுவளம், இந்த இழப்புக்கள் எல்லாம் இராணுவத்திற்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. அந்த உற்சாகத்தில் ஆனையிறவைப் பிடிப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது சிங்கள இராணுவம்.

தாக்குதலுக்கான தயார்ப்படுத்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அக்களமுனையில் பணியாற்றிக் கொண்டிருந்த கட்டளைத் தளபதிகள், தளபதிகள், களமுனைப் பொறுப்பாளர்கள் அனைவரையும் தலைவர் கலந்துரையாடலுக்காக அழைத்திருந்தார். அங்கு கலந்துரையாடலுக்காக ஒன்று சேர்ந்திருந்த வேளையில், மோட்டர் ஒருங்கிணைப்புத் தொடர்பான விடயங்களை கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது தலைவர் வந்தார். தலைவர் வரும்போது பானு அண்ணை மோட்டர் ஒருங்கிணைப்பைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தவர்.

கலந்துரையாடல் நடைபெற்ற பகுதிக்கு வந்த தலைவர் பானு அண்ணையிடம் என்ன கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்க, மோட்டர் ஒருங்கிணைப்பு சம்பந்தமாக கதைக்கின்றோம் அண்ணை என்றார். அதற்குத் தலைவர் ‘அப்ப என்ன இன்னும் மோட்டர் ஓருங்கிணைச்சு முடியவில்லையா?’ எனக் கேட்டு விட்டு அமர்ந்தார்.

இயல்பிற்கு மீறிய இறுக்கம் தலைவரின் முகத்தில் காணப்பட்டது. கலந்துரையாடலை ஆரம்பித்த தலைவர் அண்மையகாலப் பின்னடைவையும் அதில் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டி…

View original post 410 more words

நிலாந்தனின் அழைப்பும், புலிப்பினாமிகளின் இருட்டிப்பும்!

Eelamaravar

இகுருவி இராப்போசன விருந்து தமிழ்தேசிய எழுச்சிக்காக நடாத்தப்பட்டதல்ல இருப்பினும் அதில் வழக்கம் போல ஆட்டம் பாட்டத்தோடு முடிந்து விடாமல் தேசியத்தையும் அதில் உள்வாங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

நிலாந்தன் நோர்வேயில் தொடங்கி அண்மையில் கனடா வரை தொடர்ச்சியாக வலிகளிருந்து தேசத்தின் பால் ஒன்றுபடுங்கள் என்று புலம்பெயர் அமைப்புகளுக்கும் தேசியத்தை நேசிப்பவர்களுக்கும் அழைப்பு விடுத்து வருகின்றார்.

நிலாந்தனின் உரை  பல்வேறுபட்ட பரினாமங்களைக் கொண்டது

  1. புலம் பெயர் தமிழர்களுக்குள் உள்ள பிரிவினைகள் ,
  2. தீர்க்கதரிசனை அற்ற எதிர்கால கொள்கை அற்ற அமைப்புக்களின் குறைபாடுகள்,
  3. தாயக மக்களுக்கான செயற்திறன் உடைய உதவிகள்,
  4. ஒருங்கினைக்கப்பட்ட தகவல் மையம்,
  5. தமிழ் பொது நிதியம்
  6. தமிழ் பொது ஊடகம்
  7. தமிழ் பொது அறக்கட்டளை
  8. புலம் பெயர் மகா சபை
  9. ஒரு பல்லின சமூக ஊடகம்

போன்ற பல்வேறு தகவல்களுக்கான விளக்கங்கள்,கேள்விகள்

நிச்சயமாக தமிழர்கள் பார்க்க வேண்டிய உரை. அதன் முழுமையான உரையை காணொளியில் கேட்கலாம்…


அது புலிப்பினாமிகளுக்கும், போலித் தேசியவாதிகளுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதில் வழக்கம் போல் கூலிக்கு மாரடிக்கும் கனடா கூத்தமைப்பு தங்கவேலு தனது முகநூலில் ஆரம்பித்து வைத்திருக்கின்றார். இத்தனைக்கும் அவரும் இந்த விருந்தில்  பிரதம அதிதியாக கலந்திருக்கின்றார்.

அதை இந்த படத்தொகுப்பில் பார்க்கலாம்

மற்றைய புலிப்பினாமிகளும் ,போலித் தேசியவாதிகளும் அவர் தம் ஊது குழல்களும் இதை இருட்டடிப்புச் செய்து வருகின்றனர்.

ஏனெனில் இவர்களின் போலித் தேசியத்தின் இருப்பை அது இல்லாமல் செய்து விடும். ஒரு சிலரின் தனிப்பட்ட…

View original post 513 more words

குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.

தாய் மண்ணில் காவல் தெய்வங்கள்

eelamview

அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது.Brigadier Aathavan or gaddaffi

இனம் புரியாத மகிழ்சியோடும், ஒரு விதமான படபடப்போடும் அனைத்துத் தளபதிகளும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். “ஊஊ” என்ற ஓசையை கிளப்பியபடி விரைந்து வந்த வாகனத்தில் இருந்து இறங்கிய தலைவரை உற்சாகத்தோடு வரவேற்கின்றார்கள் தளபதிகளும், போராளிகளும். எப்போதும் தலைவரோடு கூடவே கடாபி அண்ணையையும் வரவேற்றவர்கள், தமக்குள் பேசிக்கொள்கிறார்கள் “கடாபி அண்ணை சூட்டுப்போட்டியில் கலந்து கொண்டால் தாங்கள் எப்படி வெல்லுறது…”

அனைத்துத் தளபதிகளுக்கும் போட்டிக்கான விதிமுறைகள் கூறப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் 10 ரவைகளையும் குறுப்பீங்காய்(துல்லியமான சூட்டு இடைவெளி) அடிப்பவர்களுக்கே முதலிடம். ஒவ்வொருவரும் தங்களுக்கான ரவைகளை அடித்து முடித்தபோது இறுதி சூட்டாளரான கடாபி அண்ணை துப்பாக்கியைத் தூக்கி இலக்கைக் குறிபார்க்கிறார். அனைத்துத் தளபதிகளும் அவரையே கண்ணை இமைக்காமல் பார்க்கின்றனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் 10 ரவைகளையும் அடித்து விட்டு, கடாபி அண்ணை நிமிரும் போது, கடாபி அண்ணையும் “ஸ்கோரை” (பெறுபேரு) பார்ப்பதற்காக அனைவரும் தலைதெறிக்க ஓடுகின்றனர். “ஒரு ரவுண்ட்ஸ் மட்டும் தான் பிடிச்சிருக்கு” என்று முதல் பார்த்த கமல் சொல்ல, அதைத் தொடர்ந்து எல்லோரும் அதையே சொல்ல, தலைவர் அவர்கள் இலக்கின் பின்பக்கம் செல்கின்றார்.

என்ன அதிசயம் அனைவரும் பிரமித்துப்போனார்கள். ஒரு ரவை போன அதே பாதையால் பத்து ரவைகளும் போயிருக்கின்றன. கடாபி அண்ணையை அருகழைத்த…

View original post 1,806 more words

பங்குனி மாதம் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மாவீரர்கள்.

Em inathin vidiyalitka kanthakaththudan kaatri karaintha karuvenkaikal ivar

eelamview

BT ltte march

இம்மாவீரர்களுக்கும் மற்றும் இதே மாதம் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கம்.

View original post

12.03.2000 நெடுந்தீவு கடற்பரப்பில் நேரடி மோதலில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்

eelamview

12.03.2000 ltte bts12.03.2000 அன்று யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

கடற்கரும்புலி மேஜர் பரதன்
சதாசிவம் சந்திரகுமார்
அம்பாறை

கடற்கரும்புலி கப்டன் தினேஸ் (சுவேந்திரன்)
வயிரவநாதன் கஜானன்
யாழ்ப்பாணம்

கடற்கரும்புலி மேஜர் மதன்
சிதம்பரநாதம் சிவாஜிநாதன்
திருகோணமலை

Bt Cap ThineshBt Maj ParathanBt Maj Mathan

ஆகிய கடற்கரும்புலிகளின் 13ம் ஆண்டு நினைவுவணக்க நாள் இன்றாகும்.

ltte veeravanakam

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

View original post

கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள்

eelamview

BT-Parathan-Thines-Mathan

மன்னார் மாவட்டம் இரணைதீவு கடற்பரப்பில் 12.03.2000 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மேதலில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் உயிரோட்டம்….

இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

View original post